நெல்லையில் மகளிர்சுய உதவிக்குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த பெண் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அச்சம்பாடு பகுதியை சேர்ந்த ஆனந்தராபின் மனைவி பிரான்சிஸ் ரூபி. அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் மனைவி பொன்மாரி (49) இருவரும் வழக்கறிஞராக வள்ளியூரில் வேலை செய்து வருகின்றனர். பொன்மாரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வருகிறார். பிரான்சிஸ் ரூபி அந்த மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
இதில் மகளிர் சுயஉதவிக்குழுவில் இருக்கும் பிரான்சிஸ் ரூபி உட்பட சுமார் 15 பெண்களின் மகளிர் குழு நிதியை வங்கியில் செலுத்தாமல் பொன்மாரி கையாடல் செய்துள்ளார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பொன்மாரி கைது செய்யப்பட்டார்.
சுயஉதவிக் குழு மூலம் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் எச்சரித்துள்ளார்
No comments:
Post a Comment