Monday, June 7, 2010

தெ.ஆப்ரிக்க அதிபர் மனைவி பாதுகாவலரால் கர்ப்பம்


தென் ஆப்ரிக்க அதிபர் மனைவி கர்ப்பமாகி இருக்கிறார். ஆனால், அதற்கு காரணம் அதிபரல்ல என்பதுதான் அந்நாட்டில் இப்போதைய பரபரப்பு.


தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா. வயது 68. இதுவரை 5 திருமணங்கள் செய்திருக்கிறார். அவர்களில் 3 மனைவிகள் இப்போது அவருடன் வாழ்கின்றனர். அதிபருக்கு 20 குழந்தைகள். சும்மா இல்லாத ஜுமா, கடந்த ஜனவரியில்தான் தனது 5வது மனைவியை கல்யாணம் செய்து கொண்டார். அப்போது அவரது 2வது மனைவி துலி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது அவரால்தான் அதிபருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ‘அதிபரின் 2வது மனைவி துலி, அவரது பாதுகாவலரால் கர்ப்பமாக இருக்கிறார்’ என்ற பரபரப்பு செய்தி தென் ஆப்ரிக்காவை இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறது.


அந்நாட்டின் முன்னணி நாளேடு ‘தி ஸ்டார்’. அது வெளியிட்டுள்ள செய்தியில், ‘பாதுகாவலர் பிந்தா தாமோவுடன் டிசம்பர் 17ம் தேதி துலி தனிமையில் இருந்தபோது பிடிபட்டார். தென் ஆப்ரிக்காவின் ஜுலு பழங்குடியின வழக்கப்படி தன்னை விட அதிகாரத்தில் இருப்பவரின் மனைவுடன் தொடர்பு கொள்வது கடும் குற்றம். அதற்கு தண்டனை அதிகம். அதை சந்திக்க பயந்து தாமோ தற்கொலை செய்தார். அவர் எழுதி விட்டு சென்ற கடிதத்தில் அதிபர் மனைவியுடன் உறவு கொண்டதை குறிப்பிட்டுள்ளார்’ என்கிறது செய்தி.


இதையடுத்து, ‘அதிபரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சம் போடுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த தகாத உறவு பற்றிய செய்திக்கு ஆதாரம் இருப்பதாக ‘தி ஸ்டார்’ தெரிவித்துள்ளது.


இதை உறுதிப்படுத்தும் வகையில், அதிபர் குடும்பத்தின் மற்ற பாதுகாவலர்கள் யாரும் தாமோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. ஆனால், அதிபர் குடும்பத்தின் சார்பில் துலி மட்டுமே பங்கேற்றார். அதிபர் ஜுமாவை திருமணம் செய்வதற்கு முன்பே தென் ஆப்ரிக்க பிரபல நடிகர் ஜோ மபேலாவுடன் துலிக்கு கள்ளத் தொடர்பு இருந்தது. அதை மபேலா உறுதி செய்தார்.


இதுபற்றி அவர் நேற்று கூறுகையில், “30 ஆண்டுகளாக நீடித்த உறவு பற்றி இப்போது விவரிப்பதால் எனது குடும்பம் பிரிவதை விரும்பவில்லை. அதிபரின் வாழ்க்கைப் புத்தகத்தில் நான் இடம்பெற ஆசையில்லை” என்றார்.


அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரச்னைக்குரிய மனைவி துலியுடன் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment