Sunday, June 6, 2010

பெற்ற குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த தாய் கைது





பெற்ற குழந்தைகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் தாயை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், தான் சாப்பிட குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.


குஜராத் மாநிலம் அகமதபாத்தைச் சேர்ந்தவர் கான்கு (25). பிழைப்பு தேடி ராஜஸ்தான் மாநிலம் சென்றார். ஜெய்ப்பூரில் தன்னுடைய மகன் இமித் (7), மகள் ரூபா (9) ஆகியோரை பிச்சை எடுப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்து, ரயில் நிலையம் பகுதியில் பிச்சை எடுக்க வைத்தார். விருப்பம் இல்லாமல் அழுதுகொண்டே பிச்சை எடுத்த 2 குழந்தைகளையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது தான் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய் பிச்சை எடுக்க வைத்து சாப்பிட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இரண்டு குழந்தைகளையும் குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்




If approached by women carrying a baby and begging for money. Please do not give them money.






No comments:

Post a Comment