Saturday, June 12, 2010

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தையடுத்த அத்தியூர் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (40). இவரது மனைவி பெரியம்மாள் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராஜூ வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பெரியம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குமிடையே கள்ளக்காதல் உருவானது. சமீபத்தில் ஊர் திரும்பிய ராஜூ, இதையறிந்து பெரியம்மாளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பெரியம்மாள், ஏற்கனவே திட்டமிட்டபடி, கணவரை அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுரேஷ் மற்றும் பெரியம்மாள் இணைந்து இரும்பு கம்பியால் ராஜூவை அடித்து கொன்று, அருகிலிருந்த குப்பை மேட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ராஜூ காணாமல் போனதையறிந்த உறவினர்கள் அவரை தேட, பிணமாக ராஜூ மீட்கப்பட்டார். மங்கலமேடு போலீசார் நடத்திய விசாரணையில், பெரியம்மாள் சுரேஷூடன் இணைந்து ராஜூவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பெரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.


No comments:

Post a Comment