குடும்பத் தகராறு காரணமாக விவசாயியை அடித்துக்கொலை செய்த வழக்கில் அண்ணன் ( மாமனார்), தங்கைக்கு ஆயுள் தண்டனை விதித்து, நெல்லை விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் வெள்ளத்துரை மகள் கலாவதி(25). இவருக்கும், மடத்துப்பட்டி விவசாயி மகாராஜனுக்கும்(29), திருமணம் நடந்தது. பிரசவத்திற்காக, தாய் வீட்டிற்கு சென்றார் கலாவதி. அங்கு அவரைப்பார்க்கச் சென்ற மகாராஜனுக்கும், கலாவதிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 2007 மார்ச் 20ம் தேதி, கலாவதியின் தந்தை வெள்ளத்துரை(50) தாய் அங்கம்மாள்(42) அத்தை கொப்பாத்தி(35) ஆகியோர் மகாராஜனை அடித்தனர். அதில் காயமடைந்த மகாராஜன், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணை, நெல்லை விரைவு கோர்ட்- 1ல் நடந்தது. தீர்ப்பளித்த நீதிபதி பொன்பிரகாஷ், கொலை செய்த வெள்ளத்துரை, தங்கை கொப்பாத்திக்கு ஆயுள் தண்டனை, தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். அங்கம்மாள், வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்
No comments:
Post a Comment