Thursday, June 3, 2010

மனைவி சாவில் சந்தேகம்: மந்திரி மீது மாஜி கணவர் புகார்


கோவா சுற்றுலா அமைச்சர் மிக்கி என்ற பிரான்சிஸ்கோ, என் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதற்கு தடையாக இருந்த என்னை, தன் பதவியை பயன்படுத்தி துன்புறுத்தினார்' என, வின்ஸ்டன் பரெட்டோ என்பவர் சார்பில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சுற்றுலா அமைச்சராக இருப்பவர் மிக்கி பச்செவோ. இவரின் குடும்ப நண்பர் வின்ஸ்டன். வின்ஸ்டனின் மனைவி நாடியா (28). வின்ஸ்டனுக்கும், நாடியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், நாடியா விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தற்போது அவரது முன்னாள் கணவர் பரபரப் பான புகார் ஒன்றை தெரிவித் துள்ளார்.

சமூக சேவகர் ரோட்ரிகஸ் மூலம் அவர் தெரிவித்த புகாரில் கூறியிருப்பதாவது: என் மனைவி நாடியாவுக்கும், அமைச்சர் மிக்கிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இருவரும் ஒன்றாக பயணம் செய்தனர். இதற்கு நாடியாவின் தாயாரும் உடந்தை. இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆத்திரமடைந்த அமைச்சர், எனக்கு பல வகையிலும் தொல்லை கொடுக்கத் துவங்கினார். அமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே நாடியா எனக்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்தார். சில நேரங்களில் அமைச்சர் என்னை வெளிப்படையாகவே மிரட்டினார். அமைச்சரின் தூண்டுதலின்பேரில் நாடியா என் மீது பொய் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் என்னை கைது செய்தனர். இவ்வாறு வின்ஸ்டன் தெரிவித்துள்ளாக, ரோட்ரிகஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "நாடியா தற்கொலை தொடர்பாக, நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, அமைச்சர் மிக்கி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை' என்றார்.

இதற்கிடையே, கோவா முதல்வர் திகாம்பர் காமத் கூறுகையில், "நாடியா கொலை தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, அமைச்சர் மிக்கியிடம் இருந்து எனக்கு எந்த கடிதமும் வரவில்லை' என்றார். ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த விஷயத்தில் நீதிபதி தலைமையிலான விசாரணை தேவை என்று கூறியுள்ளது. அமைச்சர் மிக்கியே நீதிவிசாரணைக்கு தயார் என்று கூறியிருக்கும் போது அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பாரிக்கர் கூறும் போது, "மருந்து ஊழல், சுங்க ஊழல், எக்சைஸ் வரி ஊழல் என்று பல புகார்கள் வந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மவுனமாக இருப் பது ஏன்' என்று கேள்வி எழுப்பினார்.



No comments:

Post a Comment