Sunday, May 23, 2010

போதையில் கார் ஓட்டிய பெண் ஆட்டோ மீது மோதி இருவர் பலி

பெண் ஒருவர் குடிபோதையில் ஓட்டிய கார், ஆட்டோ மீது மோதி இருவர் பலியாயினர்; இருவர் படுகாயம் அடைந்தனர்.ராணுவ வீரர் ஒருவரின் மனைவியான நிவேதிதா சிங் என்பவர், ஷாப்பிங் மால் ஒன்றிலிருந்து தன் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் குடிபோதையில் இருந்தார். அவர் ஓட்டிய கார், எதிரில் வந்த ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதியது.

இச்சம்பவம், டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் நடந்தது.இதில், ஆட்டோ டிரைவர் ராஜ்குமார்(50), ஆட்டோவில் பயணம் செய்த மூவரில் ஒருவரான வேதபிரகாஷ் (23) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்; கீத் சிங்(28), மேக் சிங்(27) இருவரும் படுகாயம் அடைந்தனர்.ஆட்டோ டிரைவர் ராஜ்குமார், ஐந்து குழந்தைகளுக்கு தந்தை. அவரது குடும்பத்தில் சம்பாதிப்பவர் இவர் மட்டுமே. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நிவேதிதா சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5041

No comments:

Post a Comment