Friday, May 21, 2010

புழல் சிறையில் உள்ள பேரனுக்கு கஞ்சா கடத்திய பாட்டி


போரூர் ராமாபுரம் செந்தமிழ் நகர் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (29). திருட்டு, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்ற சுரேஷ், 2009ம் ஆண்டு முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது பாட்டி அருந்ததி. தி.நகர் மாம்பலம் முத்தாளம்மன் கோயில் தெருவில் வசிக்கிறார். இவர், பேரன் சுரேஷை பார்க்க நேற்று வந்தார். அப்போது, பிஸ்கட், பழம் கொண்டு வந்திருந்தார். சிறை கைதிகளை பார்க்க வந்திருந்த உறவினர்கள், நண்பர்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.


அப்போது, அருந்ததி கொண்டு வந்த பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்களை சோதனையிட்டனர். அதில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் 100 கிராம் கஞ்சாவும், மற்றொரு பாக்கெட்டில் பேட்டரி, சிம்கார்டு இல்லாத ஒரு செல்போனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அருந்ததியை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புழல் போலீசார், அருந்ததியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பேட்டரி, சிம்கார்டு இல்லாமல் செல்போன் கொண்டு வந்ததால், சுரேஷிடம் அவை இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment