Monday, June 21, 2010

மதுரை அப்பார்ட்மென்ட் பெண் கொலையில் திருப்பம்: கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்



மதுரை எஸ்.எஸ்.காலனி அப்பார்ட்மென்ட்டில் நகை, பணத்திற்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.


மதுரை பொதும்புவைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி(38). இவரது கணவர் ராஜேந்திரன். இரு ஆண்டுகளாக மலேசியாவில் கார் மெக்கானிக்காக உள்ளார். இவர்களது மகள் சங்கவி(16), மகன் அஜய்(8). கடந்த மாதம் எஸ்.எஸ்.காலனியில் உள்ள "விநாயகா' அப்பார்ட்மென்ட்டின், நான்காவது மாடியில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் குடியேறினார். ஜூன் 18ல் பள்ளிக்கு சென்றுவிட்டு சங்கவி, அஜய் திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்து, நேற்று முன் தினம் காலை கதவை உடைத்து பார்த்தபோது, கயல்விழி இறந்து கிடந்தார்.


மூச்சுத்திணற வைத்து கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது. அவரது 30 பவுன் நகைகள், 20,000 ரூபாய் திருடப்பட்டிருந்ததால், நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.


திருப்பம்: திடீர் திருப்பமாக, கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் கூறியதாவது :ஏற்கனவே கயல்விழி, மதுரை விசுவாசபுரியில் குடியிருந்தபோது, சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது வெளியே தெரிந்தவுடன், எஸ்.எஸ்.காலனியில் குடியேறி உள்ளார். தனது தொடர்புகள் இந்த குடியிருப்பில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வாட்ச்மேன் இல்லாத இந்த அபார்ட்மென்ட்டையும், ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நான்காவது மாடி வீட்டையும் தேர்வு செய்திருக்கிறார். திடீரென்று அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே செல்லும் இவர், பல மணி நேரம் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் தான், கொலை நடந்த அன்று வீடு பூட்டப்பட்டிருந்ததால், "அம்மா எங்கேயாவது வெளியே சென்றிருப்பார்' என்று அவரது பிள்ளைகள் இரவு முழுவதும் எதிர்பார்த்து இருந்திருக்கின்றனர். போலீசை திசை திருப்புவதற்காகவே நகை, பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கயல்விழிக்கு அறிமுகமான இரண்டு பேர், ஜூன் 18 காலை வந்துள்ளனர். அவர்களுக்கு கயல்விழி ஜூஸ் தந்துள்ளார். ஒருவருடன் வைத்திருந்த தொடர்பை மறைத்து, மற்றவருடன் கயல்விழி தொடர்பு வைத்துள்ளார்.இப்படி ஒவ்வொருவருக்கும் தெரியாமல் "தொடர்பை' தொடர்ந்திருக்கிறார்.


இதை எப்படியோ அறிந்த, கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபர், நண்பருடன் கயல்விழி வீட்டிற்கு வந்திருக்கலாம். பின், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கயல்விழியை கொன்று, இதுவரை அவருக்கு செலவு செய்த தொகைக்கு ஈடாக, "கிடைத்தவரை லாபம்' என்று, நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்கலாம்.

இந்த கோணத்திலும் விசாரணை நடத்துகிறோம். மேலும் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்தும் விசாரிக்கிறோம், என்றனர்.

மொபைல் போன் எங்கே?இதுபோன்ற மர்மக் கொலைகளில், போலீசாருக்கு துப்பு துலங்க உதவுவது மொபைல் போன். கயல்விழி எப்பொழுதும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பார் என்ற தகவல் கிடைத்ததால், அவரது மொபைல் போனை தேடினர். அதையும் கொலையாளிகள் முன்னெச்சரிக்கையாக எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனத்தின் மூலம், கயல்விழிக்கு யார் யார் பேசினர்; கடைசியாக பேசியது; எந்த எண்ணுக்கு அதிகமாக பேசினார் போன்ற விவரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.









No comments:

Post a Comment