Friday, September 3, 2010

தாலி கட்டிய மறுநாளே கணவருக்கு "அல்வா'மோட்டார் சைக்கிளில் காதலனுடன் "ஜூட்"


திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக் கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது.

அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை சினிமாவிற்கு அழைத்துச் சென்றால் மனம் விட்டு பேசுவாள் என, கூறினார்.

அதன்படி ரமேஷ், புவனேஸ்வரியுடன் கடலூர் வேல்முருகன் தியேட்டரில் , "வம்சம்' படம் பார்க்கச் சென்றார். காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ் வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண் பித்து, "எனது நெருங்கிய உறவினர்கள்' என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, "நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண் பித்தார்.

அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது. ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார்.

வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந் தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அள விற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற் குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது.


உறவினர் எனக்கூறி பைக்கில் வந் தவரை அறிமுகம் செய்து வைத் தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment