Friday, September 3, 2010

ஆசிரியரை மிரட்டி நிர்வாண படம் பெண் உட்பட 5 பேர் சிக்கினர்


பள்ளி ஆசிரியரை பெண்ணுடன் சேர்த்து நிற்கவைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து மோசடி செய்த இளம்பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(29). அங்குள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். இவரிடம் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனின் தாய் மோளி(35). அருகில் உள்ள வெள்ளாயணி பகுதியைச் சேர்ந்தவர். இவரது 2வது கணவர் ரெஜி(26).

மகன் படிக்கும் பள்ளிக்கு மோளி அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ஆசிரியர் ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. மோளியிடம் ராஜேஷ் மயங்கினார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மோளி, ரெஜியுடன் சேர்ந்து, ராஜேஷை நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்க திட்டம் தீட்டினார்.

இதன்படி, இருதினங்களுக்கு முன்பு ராஜேஷை, தன் வீட்டுக்கு வரவழைத்தார் மோளி. அங்கு ரெஜி மற்றும் அவரது நண்பர்கள் ரெஞ்சித்(19), ஜிஸ்ணு(19), ஷாஜு(18) ஆகியோர் மறைந்திருந்தனர்.

மோளியிடம் ராஜேஷ் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ரெஜி உள்ளிட்ட 4 பேரும், 'விபசாரம் செய்யத்தானே வந்திருக்கே’ எனக் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர். ராஜேஷை நிர்வாணப்படுத்தி செல்போனில் படம் எடுத்தனர். மேலும் மோளியுடனும் அரைகுறை ஆடையில் படம் எடுத்தனர். ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ராஜேஷின் காரை மோளிக்கு விற்றதாக எழுதி வாங்கினர். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள், ஏடிஎம் கார்டு, அதன் ரகசிய எண் ஆகியவற்றை மிரட்டி பறித்தனர்.

பின்னர் ராஜேஷை பைக்கில் அவரது வீட்டில் கொண்டு விட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து நகர துணை போலீஸ் கமிஷனர் நாகராஜூவிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் நேமம் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மோளி, ரெஜி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தார்.

No comments:

Post a Comment