Wednesday, September 1, 2010

ஆடம்பரத்தை கண்டித்ததால் மனைவி பொய் புகார்


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பொன்னகரை சேர்ந்தவர் அனுராதா(23). திருமணமாகி விவகாரத்து பெற்றவர். 2 குழந்தைகள் உள்ளனர். திருச்சியில் தனியார் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த டாக்டர் மனோஜுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை அனுராதா திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மனோஜ் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக போலீசில் அனுராதா புகார் செய்தார். இதன்பேரில், நேற்று முன்தினம் மனோஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் மனோஜ் கூறியதாவது: அனுராதா மீது இரக்கப்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவார். இதனால் குடும்ப செலவு அதிகமானது. ஆடம்பரமாக வாழ பணம் கேட்டு என்னை டார்ச்சர் செய்தார். இதை கண்டித்ததால், ஆபாச படம் எடுத்ததாக என் மீது அபாண்டமான பழியை சுமத்தி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment