Thursday, July 29, 2010

பெண் போலீசுடனான கள்ளக்காதலால் வந்த மோதல்

காதலன் வீரா

பெண் போலீசுடனான கள்ளக்காதலை கண்டித்ததால், மின்வாரிய ஊழியரை கொலை செய்து, பிணத்தை அடையாளம் தெரியாமல் எரித்த சம்பவம், சென்னையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரும்; கைதான கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வேளச்சேரி நேரு நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பெருங்குடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றினார். கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அவரை காணவில்லை. அவரது தாய் செல்லம்மா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஏற்கனவே ராஜேந்திரன் மீது அவரது மனைவி அனிதா கிண்டி மகளிர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். இதற்காக ராஜேந்திரனையும், அவரது மனைவியையும் அழைத்து பேசினர். அதன்பின் ராஜேந்திரனை மர்ம ஆசாமிகள் 6 பேர் மார்ச் 6ம் தேதி தாக்கினர். மாமியார் பாக்கியலட்சுமிதான் ஆள் வைத்து தாக்கியதாக ராஜேந்திரன் புகார் கொடுத்தார்.


இந்த பின்னணியில் ராஜேந்திரன் மாயமாகி உள்ளதால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காணாமல் போனாரா, கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது. காணாமல் போனவருக்கும் மனைவிக்கும் இடையே பிரச்னை வர என்ன காரணம் என்ற விசாரணையில், வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக உள்ள சாஸ்திரக்கனி (37) தொடர்பு பற்றி தெரியவந்தது. தகவல் தந்தவர் ராஜேந்திரனின் தாய் செல்லம்மா.


ராஜேந்திரனுடன் சாஸ்திரக்கனிக்கு சிறு வயது முதல் பழக்கம். கனி வீட்டுக்கு ராஜேந்திரன் வந்து செல்வதும், இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பின்னர் பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை நோக்கி விசாரணை திரும்பியது. அவரைப் பற்றிய ரகசியத் தகவல்களை சேகரித்தனர். அதில் வீரா என்ற வீரராஜனுடன் தற்போது கனி தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்தனர். அப்படியென்றால் ஏற்கனவே பழகிய ராஜேந்திரன் கதி? அடுத்தகட்ட விசாரணையில் உண்மை தெரிந்தது. சாஸ்திரக்கனியும், வீராவும் பிடிபட்டனர். ராஜேந்திரனை கொன்று, திருவள்ளூரில் உடலை எரித்த விஷயம் வெளியானது.



நான் சாலிகிராமத்தில் வசித்து வருகிறேன். பிகாம் படித்து வந்தேன். முடிக்கவில்லை. விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்தேன். கார் ஓட்டத் தெரியும் என்பதால் இன்ஸ்பெக்டரின் காரை ஓட்டி வந்தேன். இன்ஸ்பெக்டர் வேளச்சேரிக்கு மாறியதும் என்னையும் அழைத்து வந்தார். அப்போதுதான் சாஸ்திரக்கனியுடன் பழக்கம். அடிக்கடி சாஸ்திரக்கனியின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருப்போம். அவர் கணவரை விட்டு பிரிந்து வசித்து வந்ததால், எந்த தடையும் இல்லை. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். வீட்டில் அவர் மட்டும்தான் இருப்பார். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம்.
இந்தநிலையில் ஒரு நாடகம் ஆடினேன். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தேன். நான் பொய் சொன்னதை இன்ஸ்பெக்டர் முதல் அனைவரும் நம்பி விட்டனர். ஸ்டேஷனில் எனக்கு பார்ட்டி கொடுத்தனர்.


அதிலிருந்து சாஸ்திரக்கனிக்கு என் மீது பைத்தியம். எல்லா வகையிலும் என்னை குஷிப்படுத்த ஆரம்பித்தார். ஐபிஎஸ் ஆன பிறகும் என்னை விட்டு விடக் கூடாது என்று கெஞ்சுவார்; கொஞ்சுவார். அந்த சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியாமல் இருந்தேன்.


திடீரென்று ஒருநாள் ராஜேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் கனி. அப்போது, மனைவியுடன் பிரச்னை என்று என்னிடம் அவர் கூறினார். பைக்கில் சென்றபோது 6 பேர் கும்பல் ராஜேந்திரனை தாக்கியது பற்றியும், மாமியார் தான் காரணம் என்றும் புலம்பினார். அதோடு விடாமல், தன்னுடைய வேலையை காலி செய்ய மாமியார் முயற்சிப்பதாக சந்தேகப்பட்டார். மாமியாரை கொலை செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். நானும் ரூ.2 லட்சம் கொடுத்தால் தஞ்சாவூரில் இருந்து ஆள் வரவழைத்து கொலை செய்யலாம் என்றேன். அவரும் பணம் கொடுத்தார்.


அதுவரைக்கும் கனிக்கும் எனக்கும் இருந்த கள்ளத் தொடர்பு பற்றி அவருக்கு தெரியாது. என்னைப் பற்றி கனி அவரிடம் என்ன சொல்லியிருந்தாள் என்பதும் எனக்கு தெரியாது. ஒரு நாள் அவர் கனி வீட்டுக்கு வந்தபோது, விஷயம் தெரிந்து விட்டது.


எனக்கும் சாஸ்திரக்கனிக்கும் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து அதிர்ந்து போய் விட்டார். ஆனால் என்னைக் கண்டிக்கவில்லை. சாஸ்திரக்கனியை கடுமையாக கண்டித்துள்ளார். என்னிடம் நண்பர் போலவே பழகினார்.


இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாமியாரை கொல்ல திட்டம் போட்டவர் என்பதால் உஷாரானேன். எப்படியும் என்னை கொலை செய்ய திட்டம் போடுவார் என்று சந்தேகம் வந்தது. தஞ்சையில் இருந்து என்னுடைய உறவினர்கள் முருகன், வேணுகோபால், சதீஷ் ஆகியோரை வரவழைத்தேன். அவர்களுடன் சென்று ராஜேந்திரனை கடந்த மார்ச் 25ம் தேதி சந்தித்தேன்.
“மாமியாரை கொலை செய்ய ஆட்கள் வந்துள்ளனர். நாம் சென்னையில் இருக்க வேண்டாம். நண்பர்களுடன் திருத்தணி செல்வோம்” என்று கூறி காரில் அழைத்துச் சென்றேன். திருத்தணி அருகே எல்லப்பநாயுடு பேட்டை செல்லும் வழியில் காட்டுக்குள் அவரை வெட்டிக் கொலை செய்தோம். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்தோம்.


மறுநாள், காலையில் கருகிய நிலையில் கிடந்த பிணத்தை கனகம்மா சத்திரம் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால், அடையாளம் தெரியாத பிணம் என்று முடிவு கட்டியதால், நாங்கள் பயமின்றி இருந்தோம். ஆனால், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மா, சாஸ்திரக்கனி பற்றிய தகவல்களை சொல்லியதால் தான் சந்தேகம் எங்கள் மீது வந்தது. நாங்கள் மாட்டிக் கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் வீரா கூறியுள்ளார்.


வீரா உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் திருவள்ளூருக்கு அழைத்துச் சென்று கொலை நடந்த இடத்தை பார்த்தனர். கொலையை மறைத்ததாக சாஸ்திரக்கனியும் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதல் கொலைக்கு பெண் போலீஸ் காரணமாக இருந்ததும், இறந்தவரும், கொலையாளியும் அந்த பெண் போலீசின் கள்ளக்காதலர்கள் என்பதும், மாமியாரை கொலை செய்ய கொடுத்த பணத்தில், அவரையே கொன்றதும் விசாரணையில் கிடைத்த புதிய தகவல்கள் என்றனர் போலீஸ் அதிகாரிகள்.

சாஸ்திரக்கனி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்


என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். எங்கள் ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஒரே பள்ளியில் படித்தோம். படிக்கும்போதே எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. பல முறை உல்லாசமாக இருந்துள்ளோம். எங்களுடைய காதல் பெற்றோருக்குத் தெரியவந்தது.


அப்போது ராஜேந்திரனுக்கு வேலை கிடைக்காததால், செல்வராஜ் என்பவருடன் 1993ம் ஆண்டு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவர். 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜேந்திரனுக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. எனக்காக சென்னைக்கு மாறி வந்தார். நாங்கள் வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் தான் வசித்து வருகிறோம். நானும் அவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததால் பிரிந்து சென்று விட்டார்.


நான் வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றினேன். போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வீரா அறிமுகமானார். அவர், இன்ஸ்பெக்டருக்கு மிகவும் நெருக்கம். நான் வரவேற்பரையில் இருப்பேன். நான் கணவரை விட்டுப் பிரிந்தவள் என்று தெரிந்ததும், என்னுடன் நெருங்கிப் பழகினார். அவருக்குத் திருமணமாகவில்லை. இன்ஸ்பெக்டருக்கு தெரிந்தவர் என்பதால், அவரை மடக்கிப் போட்டால் பிரச்னை இருக்காது என்று நினைத்தேன். அதனால் எனக்கு கடினமான டூட்டி கொடுப்பதில்லை.


வீரா அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இது ராஜேந்திரனுக்குத் தெரிந்து விட்டது. அவர் என்னைக் கண்டித்தார். இதை வீராவிடம் தெரிவித்தேன். ஒருநாள் வீரா, ராஜேந்திரனை கொன்று விட்டதாக தெரிவித்தார். தன்னை ராஜேந்திரன் கொலை செய்வார் என்ற பயத்தில் அவரை கொலை செய்து விட்டதாக சொன்னார். மேலும் இன்ஸ்பெக்டர் தெரிந்தவர் என்பதால், நாமே ராஜேந்திரனின் அம்மாவிடம் சொல்லி காணவில்லை என்று புகார் கொடுப்போம். பின் அந்தப் புகாரை அப்படியே கிடப்பில் போட்டு விடலாம் என்று யோசனை கூறினார்.


இதற்கிடையில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றதாக வீரா சொன்னதும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. வீரா மீது உள்ள மோகத்தால், கொலையை மறைத்து விட்டேன். பின், ராஜேந்திரனின் அம்மா செல்லம்மாவிடம் சென்று ராஜேந்திரனைக் காணவில்லை என்று புகார் செய்யுங்கள் என்று கூறினேன். நானும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் தைரியத்தில் புகார் செய்ய வைத்தேன். ஆனால் எனக்கும் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை செல்லம்மாள் போலீசில் சொல்லியதால் என்னை வடபழனிக்கு மாற்றி விட்டனர். இன்ஸ்பெக்டரும் வேறு பிரச்னையால் மாற்றப்பட்டார்.

இப்போது நானும், வீராவும் சிக்கினோம்.
இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியுள்ளார்.


பெண் போலீஸ் சாஸ்திரக்கனி


No comments:

Post a Comment