Tuesday, August 10, 2010

‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ சரமாரியாக விளாசியது டெல்லி உயர் நீதிமன்றம்



இன்றொருவருடன் தங்கலாம்; நாளை வேறொருவருடன் குடித்தனம் நடத்தலாம். பிடித்தால் ஒன்றாக சில நாள் வாழலாம்; பிடிக்காவிட்டால், ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் பிரியலாம்; இது தான் ‘தாலிகட்டா வாழ்க்கை’யான ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்.’
& ‘தாலி கட்டா கணவன் & மனைவியாக வாழும் மேற்கத்திய பாணி வாழ்க்கை பற்றி இப்படி டெல்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக சாடியுள்ளது.


‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தாலி கட்டா வாழ்க்கை முறை, மேற்கத்திய இறக்குமதி. பிட்சா, பர்கர் போன்ற ‘கொழுப்பு’ உணவுகள் போல, இந்த கலாசாரகேடும் இந்தியாவில் ஊடுருவி விட்டது.

லண்டனை சேர்ந்த வக்கீல் அலோக் குமார்; டெல்லியில் தங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். அவருடன் பழகிய ஒரு பெண், அவருடன் ‘தாலி கட்டா மனைவி’யாக வாழ்ந்து வந்தார். இருவரும் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

சமீபத்தில், அந்த பெண்ணின் பெற்றோர், ‘நீ காதலிக்கும் அந்த வக்கீலையே திருமணம் செய்து கொள்ளேன்’ என்று கூற, அந்த பெண்ணும், அவரை கேட்டாள். ஆனால், அந்த வக்கீலோ, ‘நாம் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறோம்; வேண்டுமானால், பிரிந்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.

இதனால் கோபம் கொண்ட அந்த பெண், போலீசில் புகார் தந்தார். “என்னுடன் பழகி, ஒன்றாக வாழ்ந்து இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்; அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தந்தார்.

போலீசும் வழக்குப் பதிவு செய்து, வக்கீலை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. வக்கீலோ, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். “நாங்கள் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இந்த முறையில் வாழும் தம்பதிகள் உண்மையான கணவன் & மனைவி அல்ல; எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற விருப்பத்துடன் தான் வாழ்கிறோம். என்னுடன் வாழ்ந்த பெண்ணை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. என் மீது எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.


மனுவை விசாரித்த நீதிபதி திங்க்ரா, இரு தரப்பிலும் வாதங்களை கேட்டார். பின்னர் “மனுதாரர் மீதான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்கிறேன்’ என்று கூறி, “லிவ் இன் ரிலேஷன்ஷிÓ பற்றி சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டார்.

நீதிபதி கூறியதாவது: கணவன் & மனைவி என்பவர்கள், சட்டப்படி விதிகளை பின்பற்றி, கட்டுப்பாடுகளுடன் திருமண வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்கள் கோர்ட்டை நாடி நீதிக்கு முறையிடலாம். ஆனால், எந்த சட்டத்தின் படியும் இல்லாமல் மனம் போக்கில் வாழ்பவர்கள் “லிவ் இன் ரிலேஷன்ஷிÓப்பில் வாழ்பவர்கள். இந்த முறையில் வாழ்வோர், தாலிகட்டா மனைவி & கணவனாக வாழ்கின்றனர். இந்த முறையில் திருமணம் ஆகாத பெண், திருமணமான ஆணுடன் வாழ முடிகிறது. அதுபோல, திருமணமாகாத ஆண், திருமணமான பெண்ணுடன் வாழ முடிகிறது.

இப்படி நிலை இருக்கும் போது, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியோ, திருமணம் செய்ய மறுக்கிறார்; ஏமாற்றிவிட்டார் என்றோ புகார் தர முடியாது.

மேலும், இந்த முறையில், “மலடிÓ என்று தாலி கட்டா மனைவியை பார்த்து அந்த “கணவனோÓ அவனுக்கு ஆண்மைத்தனம் இல்லை என்று அந்த பெண்ணோ எந்த கோர்ட்டிலும் முறையிட்டு நீதி பெற முடியாது. காரணம், எந்த கட்டுப்பாடும், சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டத்தல்ல இந்த முறை. இவ்வாறு நீதிபதி திங்க்ரா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment