Tuesday, August 10, 2010

கள்ளக்காதலன், மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி சிக்கினார்


கள்ளக்காதலன், மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.


பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்டாலின் நகர், 3வது தெருவில் வசித்து வந்தவர் பிரேம்ராஜி (54). கேரளாவை சேர்ந்தவர். வண்ணாரப்பேட்டையில் இருந்து பிஸ்கெட்கள் மொத்தமாக வாங்கி, பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டீ கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். கடந்த 20 வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த அனிதா (42) என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ச்சனா (19) என்ற மகள் உள்ளார்.


கடந்த 2 வருடங்களாக நீடித்த கருத்து வேறுபாடு காரணமாக பிரேம்ராஜிம், அனிதாவும் பிரிந்தனர். அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வந்தனர். அனிதாவுடன் அவரது மகள் அர்ச்சனா வசித்து வந்தார். இந்நிலையில் லாரன்ஸ் (30) என்பவருடன் அர்ச்சனாவுக்கு திருமணம் நடந்தது. அனிதா, அர்ச்சனாவின் நடவடிக்கை பிடிக்காத லாரன்ஸ் அவரை விட்டு பிரிந்து விட்டார்.


இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பிரேம்ராஜியை பார்க்க அவரது குடிசை வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள், பிரேம்ராஜி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலத்தின் அருகில் ஒரு நைலான் கயிறும் கிடந்தது.


இதுகுறித்து உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் சந்தோஷமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது.


பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், வானவேடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25), மதன் (24) இருவரும் அண்ணன், தம்பிகள். பிரபாகரன் கடைகளுக்கு பிஸ்கெட் போடும் தொழில் வருகிறார். மதன், அமைந்தகரையில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்கிறார். இவர்கள் இருவரையும் சின்ன வயதில் இருந்தே அனிதாவுக்கு தெரியும். அடிக்கடி வீட்டுக்கு வருவதும் போவதும் வழக்கம். இதில் பிரபாகரனுக்கு அனிதாவுடனும் மதனுக்கு அர்ச்சனாவுடனும் தொடர்பு ஏற்பட்டது. இதை பிரேம்ராஜ் கண்டித்துள்ளார். ஏற்னவே மருகன் லாரன்ஸ் பிரிந்து போவதற்கும் அனிதா தான் காரணம் என்பதால் கடும் கோபத்தில் இருந்தார். இதனால் வந்த கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்தனர். ஆனாலும், அதே பகுதியில் தனியாக வசித்தவரால், மனைவி, மகளின் கள்ளத்தொடர்பை சகிக்க முடியவில்லை.


இதையடுத்து அனிதா, மதன், பிரபாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பிரேம்ராஜியை கொலை செய்ய திட்டமிட்டனர். அனிதா சொன்னபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதன், பிரபாகரன் ஆகியோர் பிரேம்ராஜியை வலுக்கட்டாயமாக மது அருந்த அழைத்துச் சென்றனர். 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர். வீட்டுக்கு வந்த பிரேம்ராஜ், போதையில் மயங்கிக் கிடந்தார். அவரது கழுத்தில், மதன், பிரபாகரன் சேர்ந்து நைலான் கயிறால் சுற்றி ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தனர். வாயில் ரத்தம் வெளியேறி சிறிது நேரத்தில் பிரேம் இறந்தார்.


பின்னர் அருகில் உள்ள அனிதா வீட்டுக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். குடிபோதையில் இறந்து போனதாக சொல்லிக் கொள்ளலாம் என்று தங்களுக்குள் முடிவு செய்தனர்.
வழக்கம்போல் பிரபாகரன் அனிதாவுடனும் மதன் அர்ச்சனாவுடனும் உல்லாசம் அனுபவித்து தூங்கி விட்டனர். ஆனால், கொலை செய்ய பயன்படுத்திய நைலான் கயிற்றை போதையில் அங்கேயே போட்டு விட்டு வந்ததால், குடிபோதை சாவு அல்ல; கொலை என்பது அடுத்த நாளே உறுதியானது. அதையடுத்து அனிதா, அர்ச்சனாவிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் அண்ணன், தம்பிகள் மாட்டிக் கொண்டனர். கொலைக்கு மூலகாரணமாக இருந்ததாக அனிதாவும் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment