Andhra Pradesh Police arrested a mother, who allegedly killed her 13-year-old son because he objected to her 'illicit' affair.
The 32-year-old mother gave electric shock to her son in Nalgonda district resulting in his death after he objected to her relationship, police said on Saturday.
The incident occurred at Damarchala village of Miryalguda Mandal of the district yesterday, they said
According to police, the boy was tied to a pole near his house and his mother allegedly held a live electric wire to his body resulting in his death.
A senior police officer quoting Damarchala villagers and sarpanch said K Shivamani was reportedly angry when her son opposed her alleged illicit affair.
The woman, on the other hand, refuted the allegation and claimed that her son harassed her daily. She said the boy was neither studying nor doing any work and was indulging in illegal acts, police said.
"Following a complaint by the villagers, police have registered a case of murder against Shivamani, who has been taken into custody," a senior police officer said.
Sunday, August 29, 2010
Monday, August 16, 2010
காசேதான் கடவுளடா
காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன்.
இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி.
நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச:) ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, August 10, 2010
‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ சரமாரியாக விளாசியது டெல்லி உயர் நீதிமன்றம்
‘இன்றொருவருடன் தங்கலாம்; நாளை வேறொருவருடன் குடித்தனம் நடத்தலாம். பிடித்தால் ஒன்றாக சில நாள் வாழலாம்; பிடிக்காவிட்டால், ஒருவரிடம் ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் பிரியலாம்; இது தான் ‘தாலிகட்டா வாழ்க்கை’யான ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்.’
& ‘தாலி கட்டா கணவன் & மனைவியாக வாழும் மேற்கத்திய பாணி வாழ்க்கை பற்றி இப்படி டெல்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக சாடியுள்ளது.
‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தாலி கட்டா வாழ்க்கை முறை, மேற்கத்திய இறக்குமதி. பிட்சா, பர்கர் போன்ற ‘கொழுப்பு’ உணவுகள் போல, இந்த கலாசாரகேடும் இந்தியாவில் ஊடுருவி விட்டது.
லண்டனை சேர்ந்த வக்கீல் அலோக் குமார்; டெல்லியில் தங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். அவருடன் பழகிய ஒரு பெண், அவருடன் ‘தாலி கட்டா மனைவி’யாக வாழ்ந்து வந்தார். இருவரும் ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் ஒன்றாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
சமீபத்தில், அந்த பெண்ணின் பெற்றோர், ‘நீ காதலிக்கும் அந்த வக்கீலையே திருமணம் செய்து கொள்ளேன்’ என்று கூற, அந்த பெண்ணும், அவரை கேட்டாள். ஆனால், அந்த வக்கீலோ, ‘நாம் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறோம்; வேண்டுமானால், பிரிந்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட அந்த பெண், போலீசில் புகார் தந்தார். “என்னுடன் பழகி, ஒன்றாக வாழ்ந்து இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்; அவர் மீது கிரிமினல் வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தந்தார்.
போலீசும் வழக்குப் பதிவு செய்து, வக்கீலை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. வக்கீலோ, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு போட்டார். “நாங்கள் காதலர்கள் அல்ல; லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இந்த முறையில் வாழும் தம்பதிகள் உண்மையான கணவன் & மனைவி அல்ல; எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற விருப்பத்துடன் தான் வாழ்கிறோம். என்னுடன் வாழ்ந்த பெண்ணை நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. என் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. என் மீது எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கை செல்லாது என்று உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி திங்க்ரா, இரு தரப்பிலும் வாதங்களை கேட்டார். பின்னர் “மனுதாரர் மீதான கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்கிறேன்’ என்று கூறி, “லிவ் இன் ரிலேஷன்ஷிÓ பற்றி சரமாரியாக கருத்துக்களை வெளியிட்டார்.
நீதிபதி கூறியதாவது: கணவன் & மனைவி என்பவர்கள், சட்டப்படி விதிகளை பின்பற்றி, கட்டுப்பாடுகளுடன் திருமண வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்கள் கோர்ட்டை நாடி நீதிக்கு முறையிடலாம். ஆனால், எந்த சட்டத்தின் படியும் இல்லாமல் மனம் போக்கில் வாழ்பவர்கள் “லிவ் இன் ரிலேஷன்ஷிÓப்பில் வாழ்பவர்கள். இந்த முறையில் வாழ்வோர், தாலிகட்டா மனைவி & கணவனாக வாழ்கின்றனர். இந்த முறையில் திருமணம் ஆகாத பெண், திருமணமான ஆணுடன் வாழ முடிகிறது. அதுபோல, திருமணமாகாத ஆண், திருமணமான பெண்ணுடன் வாழ முடிகிறது.
இப்படி நிலை இருக்கும் போது, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லியோ, திருமணம் செய்ய மறுக்கிறார்; ஏமாற்றிவிட்டார் என்றோ புகார் தர முடியாது.
மேலும், இந்த முறையில், “மலடிÓ என்று தாலி கட்டா மனைவியை பார்த்து அந்த “கணவனோÓ அவனுக்கு ஆண்மைத்தனம் இல்லை என்று அந்த பெண்ணோ எந்த கோர்ட்டிலும் முறையிட்டு நீதி பெற முடியாது. காரணம், எந்த கட்டுப்பாடும், சட்டத்திட்டத்திற்கும் உட்பட்டத்தல்ல இந்த முறை. இவ்வாறு நீதிபதி திங்க்ரா கூறியுள்ளார்.
கள்ளக்காதலன், மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி சிக்கினார்
கள்ளக்காதலன், மகளின் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஸ்டாலின் நகர், 3வது தெருவில் வசித்து வந்தவர் பிரேம்ராஜி (54). கேரளாவை சேர்ந்தவர். வண்ணாரப்பேட்டையில் இருந்து பிஸ்கெட்கள் மொத்தமாக வாங்கி, பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள டீ கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். கடந்த 20 வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த அனிதா (42) என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ச்சனா (19) என்ற மகள் உள்ளார்.
கடந்த 2 வருடங்களாக நீடித்த கருத்து வேறுபாடு காரணமாக பிரேம்ராஜிம், அனிதாவும் பிரிந்தனர். அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வந்தனர். அனிதாவுடன் அவரது மகள் அர்ச்சனா வசித்து வந்தார். இந்நிலையில் லாரன்ஸ் (30) என்பவருடன் அர்ச்சனாவுக்கு திருமணம் நடந்தது. அனிதா, அர்ச்சனாவின் நடவடிக்கை பிடிக்காத லாரன்ஸ் அவரை விட்டு பிரிந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பிரேம்ராஜியை பார்க்க அவரது குடிசை வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள், பிரேம்ராஜி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சடலத்தின் அருகில் ஒரு நைலான் கயிறும் கிடந்தது.
இதுகுறித்து உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் சந்தோஷமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கொலைக்கான பின்னணி தெரியவந்தது.
பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், வானவேடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25), மதன் (24) இருவரும் அண்ணன், தம்பிகள். பிரபாகரன் கடைகளுக்கு பிஸ்கெட் போடும் தொழில் வருகிறார். மதன், அமைந்தகரையில் ஒரு மளிகைக் கடையில் வேலை செய்கிறார். இவர்கள் இருவரையும் சின்ன வயதில் இருந்தே அனிதாவுக்கு தெரியும். அடிக்கடி வீட்டுக்கு வருவதும் போவதும் வழக்கம். இதில் பிரபாகரனுக்கு அனிதாவுடனும் மதனுக்கு அர்ச்சனாவுடனும் தொடர்பு ஏற்பட்டது. இதை பிரேம்ராஜ் கண்டித்துள்ளார். ஏற்னவே மருகன் லாரன்ஸ் பிரிந்து போவதற்கும் அனிதா தான் காரணம் என்பதால் கடும் கோபத்தில் இருந்தார். இதனால் வந்த கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்தனர். ஆனாலும், அதே பகுதியில் தனியாக வசித்தவரால், மனைவி, மகளின் கள்ளத்தொடர்பை சகிக்க முடியவில்லை.
இதையடுத்து அனிதா, மதன், பிரபாகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பிரேம்ராஜியை கொலை செய்ய திட்டமிட்டனர். அனிதா சொன்னபடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதன், பிரபாகரன் ஆகியோர் பிரேம்ராஜியை வலுக்கட்டாயமாக மது அருந்த அழைத்துச் சென்றனர். 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர். வீட்டுக்கு வந்த பிரேம்ராஜ், போதையில் மயங்கிக் கிடந்தார். அவரது கழுத்தில், மதன், பிரபாகரன் சேர்ந்து நைலான் கயிறால் சுற்றி ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்தனர். வாயில் ரத்தம் வெளியேறி சிறிது நேரத்தில் பிரேம் இறந்தார்.
பின்னர் அருகில் உள்ள அனிதா வீட்டுக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். குடிபோதையில் இறந்து போனதாக சொல்லிக் கொள்ளலாம் என்று தங்களுக்குள் முடிவு செய்தனர்.
வழக்கம்போல் பிரபாகரன் அனிதாவுடனும் மதன் அர்ச்சனாவுடனும் உல்லாசம் அனுபவித்து தூங்கி விட்டனர். ஆனால், கொலை செய்ய பயன்படுத்திய நைலான் கயிற்றை போதையில் அங்கேயே போட்டு விட்டு வந்ததால், குடிபோதை சாவு அல்ல; கொலை என்பது அடுத்த நாளே உறுதியானது. அதையடுத்து அனிதா, அர்ச்சனாவிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் அண்ணன், தம்பிகள் மாட்டிக் கொண்டனர். கொலைக்கு மூலகாரணமாக இருந்ததாக அனிதாவும் கைது செய்யப்பட்டார்.
Tuesday, August 3, 2010
லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது
திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)