Tuesday, May 18, 2010

மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை


மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார்.


இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை கத்தியால் லட்சுமி குத்தினார். படுகாயமடைந்த சாந்தா, அங்கேயே இறந்தார்.


2007ம் ஆண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்தது. லட்சுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.


இந்த வழக்கை, சென்னை மகளிர் கோர்ட் நீதிபதி முகமது ஜபருல்லாகான் விசாரித்தார். லட்சுமி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி முகமது ஜபருல்லாகான் தீர்ப்பளித்தார்.




No comments:

Post a Comment